போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ. சார்பில் தொடரப்பட்ட வழக்கு - மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை

Oct 11 2018 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
போபர்ஸ் பீரங்கி பேர விவகாரத்தில், டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

போபர்ஸ் பீரங்கி பேர விவகாரத்தில், 64 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியது தொடர்பாக, இத்தாலி தொழில் அதிபர் குவாத்ரோச்சி, இந்துஜா சகோதரர்கள், வின்சத்தா, எஸ்.கே.பட்நாகர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைவர் மீதான குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து, கடந்த 2005-ம் ஆண்டு மே 31-ந் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, சி.பி.ஐ. சார்பில் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், பா.ஜ.கவைச் சேர்ந்த வக்கீல் அஜய் அகர்வால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் நிலுவையில் உள்ளது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00