மேகாலயாவில் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகளை குறைத்து அரசு உத்தரவு
Oct 11 2018 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேகாலயா மாநிலத்தில் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு, 2 ரூபாய் 50 காசுகளை குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். கடந்த 10-ந் தேதி நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, மத்திய அரசு கடந்த வாரம் 2.50 ரூபாயை குறைத்து உத்தரவிட்டுள்ளது. எனவே, பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைத்து, விலையும் குறைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேகாலயா மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான விலை 2 ரூபாய் 50 காசுகளாக குறைக்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்தது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. ஏற்கனவே, ஆந்திரா, கர்நாடகா, மேற்குவங்கத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.