புதுச்சேரியில் அரசு விழாவில் அரசின் செயல்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் கல்லூரி மாணவர் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு

Oct 12 2018 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில், அரசின் செயல்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம், கல்லூரி மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் திரு.நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய முதல்வர் நாராயணசாமி, வடமாநிலங்களை ஒப்பிடுகையில், புதுச்சேரியில் பெண்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, பெண் குழந்தைகள் கடின உழைப்பையும், சுய ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் எனவும், இணையதளம் மூலம் பொது அறிவையும் பிற மொழிகளையும் கற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இறுதியாக மாணவர்களின் கேள்விகளுக்கு கிரண்பேடி பதிலளிப்பார் என தெரிவிக்கப்பட்டது. அப்போது மாணவர் ஒருவர், புதுச்சேரி அரசின் செயல்பாடுகள் குறித்து கிரண்பேடியை நோக்‍கி கேள்வி எழுப்பினார். இதற்கு துணைநிலை ஆளுநர் அமைதி காத்ததால், மீண்டும் அந்த மாணவர், "பெண்களுக்கான திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைந்துள்ளதா..?" என கேள்வி எழுப்பினார். இதற்கு கிரண்பேடி பதிலளிக்காமல் அமரவே, மாணவரின் கேள்விக்கு முதலமைச்சர் நாராயணசாமி பதிலளித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00