பாலியல் புகாருக்கு உள்ளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பரின் ராஜினாமா கடிதம் ஏற்பு - பாலியல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க குழு அமைத்தது மத்திய அரசு

Oct 18 2018 11:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாலியல் புகாருக்கு உள்ளான மத்திய வெளியுறவு இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

மத்திய அமைச்சரவையில், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பொறுப்பில் இருந்த திரு.அக்பர் மீது பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். மீ-டூ ஹாஸ்டாக் என்ற இணையதளம் மூலம் தெரிவிக்கப்பட்ட இந்த புகார் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகவேண்டுமென பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து, கடந்த வாரம் அவர் பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனால், திடீரென இந்த முடிவை மாற்றிக்கொண்ட அவர், தொடர்ந்து பதவியில் நீடித்தார். இந்த பிரச்சனை ஆளும் மத்திய பாரதிய ஜனதா கட்சிக்குள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான சூழலில், தனது பதவியை திரு. அக்பர் ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

இதைனையடுத்து பாலியல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க ராஜ்நாத்சிங் தலைமையிலான அமைச்சரவை குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் மேனகாகாந்தி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தி 3 மாத காலத்திற்குள் அறிக்கை அளிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00