சபரிமலை கோயிலுக்‍கு சென்ற பெண் பக்தர்கள் இருவரும் போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, திரும்பினர் : போராட்டம் தீவிரமடைவதால் பதற்றம்

Oct 19 2018 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலையில் போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, பெண் பக்தர்கள் இருவரும் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இதற்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சில அமைப்புகளும், பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சபரிமலை பகுதியில் அவர்கள் ஒன்றுதிரண்டு அங்கு வழிபாடு நடத்தச் செல்லும் பெண்களை அராஜகமாக தடுத்து நிறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் இருந்துவரும் நிலையில், இன்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரான கவிதா என்பவரும், இருமுடி அணிந்த மற்றொரு பெண்ணும் சன்னிதானம் நோக்‍கி சென்றனர். இதையறிந்த போராட்டக்‍காரர்கள் காலை முதலே சன்னிதானத்தில் திரண்டு இதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

எனினும், அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் இவ்விருவரும் சன்னிதானத்தை நெருங்கினர். இதனால் அங்கு மேலும் பதற்றம் அதிகரித்தது. போராட்டம், தொடர்ந்து தீவிரமடைந்ததால் கவிதாவும், மற்றொரு பெண் பக்தரும் திரும்பி செல்ல முடிவு செய்தனர். அதனடிப்படையில் அவர்கள் இருவரும் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். அவர்களை கேரள காவல்துறை பம்பை வரை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00