ரஃபேல் ஒப்பந்தம் குறித்து அவதூறு செய்திகளை ஒளிபரப்பியதாக குற்றச்சாட்டு - 15 ஊடக நிறுவனங்கள் மீது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் மானநஷ்ட வழக்கு

Oct 19 2018 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக அவதூறு செய்திகளை ஒளிபரப்பியதற்காக, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் சார்பாக, 15 ஊடக நிறுவனங்கள் மீது அஹமதாபாத் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்னையில், பிரதமர் திரு. மோடி, நாட்டிற்காக பணியாற்றாமல், சில தொழிலதிபர்களுக்காக பணி செய்து வருவதாகவும், அனில் அம்பானியின் நிறுவனத்துக்‍காக பாடுபட்டு வருவதாகவும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து தொலைக்‍காட்சிகளில் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில், ரஃபேல் ஒப்பந்த விவரங்கள் தொடர்பாக அவதுாறு செய்திகளை ஒளிபரப்பியதாக, தேசிய, சர்வதேச மற்றும் பிராந்திய ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் சார்பில் அஹமதாபாத் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்‍கு வரும் 26ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00