3 நாள் பரபரப்புக்‍கு பிறகு 18ம் படி ஏறி சபரிமலையில் ஐயப்ப பக்‍தர்கள் வழிபாடு - தடை உத்தரவு நீடிப்பதால் பம்பை, நிலக்கல் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம்

Oct 20 2018 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 3 நாள் பரபரப்புக்கு பிறகு பக்‍தர்கள் 18ம் படி ஏறி தரிசனம் செய்தனர். எனினும் அங்கு தடை உத்தரவு நீடிப்பதால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வருகிறது. இந்த தீர்ப்புக்‍கு பிறகு முதன் முறையாக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை நுழையவிடாமல் தடுக்கும் போராட்டம் வலுப்பெற்றதால், கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வந்தது. தற்போது, அங்கு இயல்புநிலை ஓரளவு திரும்பியிருப்பதால் இன்று அதிகாலையில் ஏராளமான பக்‍தர்கள் 18 படிகளைத் தாண்டி ஐயப்பனை தரிசித்தனர். இருமுடி சுமந்தபடி ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் இன்று காலை முதலே சன்னிதானத்தில் குவிந்துள்ளனர்.

எனினும், சபரிமலையை சுற்றியுள்ள பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் போன்ற இடங்களில் 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்‍கப்பட்டிருப்பதால், தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00