பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தசரா கொண்டாட்டத்தில் பெரும் சோகம் : ரயில் மோதி பெண்கள், குழந்தைகள் உட்பட 61 பேர் உயிரிழந்த பரிதாபம்

Oct 20 2018 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

பஞ்சாப்​மாநிலம் அமிர்தசரஸில் ராவண வதம் நிகழ்ச்சியைக்‍ காண பெருமளவில் திரண்டிருந்த கூட்டத்தினர் மீது ரயில் மோதியதில் 60-க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் திரு. அம்ரீந்தர் சிங், உயிரிழந்தவர்களுக்‍கு​அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளார்.

தசரா பண்டிகையை முன்னிட்டு, ராவணன் உருவப் பொம்மை எரிக்‍கப்படுவதைக்‍ காண்பதற்காக, பஞ்சாப் மாநிலம் Amritsar அருகே உள்ள Joda Phatak என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தை ஒட்டி ஏராளமானோர் கூடியிருந்தனர். அவர்களில் பலர்​தண்டவாளத்தின் மீதும் நின்றுகொண்டிருந்தனர். அப்போது ஜலந்தரிலிருந்து அமிர்தரசுக்‍கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. ராவணன் உருவ பொம்மை எரிந்த போது பட்டாசுகள் வெடிச்சத்தத்தால் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு ரயில் வரும் ஓசை கேட்காததால், தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது ரயில் மோதியதில் 61 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 70-க்‍கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்‍கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் திரு. அம்ரீந்தர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில உள்துறை செயலாளரை உடனடியாக விபத்து நேரிட்ட இடத்திற்கு அனுப்பிய முதலமைச்சர், காயமடைந்தோருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணைக்‍கு உத்தரவிட்டுள்ள முதலமைச்சர், இந்த துயரச் சம்வத்தில் உயிரிழந்தவர்களுக்‍கு அஞ்சலி செலுத்தும் வகையில் அம்மாநிலத்திற்கு இன்று அரசு விடுமுறையும் அறிவித்துள்ளார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விபத்து செய்தி தமது நெஞ்சை உலுக்கியதாகவும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்‍ கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்‍கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், அமெரிக்கா சென்றுள்ள நிலையில், பஞ்சாப் விபத்து பற்றி அறிந்தவுடன், தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு இந்தியா திரும்புகிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00