சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தல் : வாக்குப்பதிவு மந்தம்

Nov 12 2018 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்‍கான முதல்கட்ட தேர்தலில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 47 சதவீத வாக்‍குகளே பதிவாகியுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக திரு. ரமண்சிங் பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்‍காலம் விரைவில் முடிவுக்‍கு வருவதால், 90 தொகுதிகள் கொண்ட அம்மாநில சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக, இன்றும், வரும் 20-ம் தேதியும் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 18 தொகுதிகளிலும், இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 72 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளதால், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில், துணை ராணுவத்தினர், போலீசார் என சுமார் ஒரு லட்சம் பேர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதிலும், காலைமுதலே வாக்‍குப்பதிவு மந்தமாக இருந்து வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 47 புள்ளி ஒன்று எட்டு சதவீத வாக்‍குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00