தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் - 65 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Nov 13 2018 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

ஆந்திராவிலிருந்து தனியாகப் பிரிந்த தெலங்கானா மாநில சட்டப்பேரவை அண்மையில் கலைக்கப்பட்டதை அடுத்து அங்கு அடுத்த மாதம் 7-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. 119 தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்தில், தேர்தல் ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே தெலங்கானா ராஷ்ட்ரிய சமித், பாஜக உள்ளிட்ட கட்சிகள், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பிரச்சாரத்தை தொடங்கியிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி தற்போது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 65 பேர் கொண்ட இந்தப் பட்டியலில், தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. உத்தம்குமார் ரெட்டி ஹூசூர் நகர் தொகுதியில் போட்டியிடுவார் என அறவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல் காந்தி, கட்சியின் மத்திய தேர்தல் குழுவுடன் நடத்திய நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00