வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிசாட்-29 செயற்கைகோள் - ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்‍கு மாநிலங்களில், பல்வேறு சேவைகளை வழங்க இருப்பதாக இஸ்ரோ பெருமிதம்

Nov 15 2018 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்ரோவின் உயர்தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஜிசாட்-29 என்ற செயற்கைகோள், மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்கான ஜி- சாட் 29 செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.08 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது. உயர் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ஜி-சாட் 29 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி, புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அப்போது தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகள், ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இதன்மூலம் விண்வெளி துறையில் இந்தியா புதிய மைக்கல்லை எட்டியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜி- சாட் 29 செயற்கைக்கோள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்‍கு மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் குக்கிராமங்களை உள்ளடக்கி, அதிநவீன தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்த முக்கிய பங்காற்றும் என குறிப்பிட்ட திரு.சிவன், ஜனவரி மாதம் சந்திரயான் 2 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00