ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : உச்சநீதிமன்றத்தில் வரும் 27-ஆம் தேதி விசாரணை

Nov 15 2018 5:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்‍கை கோரும் தீர்மானத்தின்போது அரசுக்‍கு எதிராக வாக்‍களித்த, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்‍கு விசாரணையை, வரும் 27-ஆம் தேதிக்‍கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, அரசுக்‍கு- எதிராக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 10 பேர் வாக்களித்தனர். எடப்பாடிக்‍கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்க செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி, கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு. தங்கதமிழ்ச்செல்வன், வடசென்னை வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. வெற்றிவேல் மற்றும் திமுக கொறடா சக்கரபாணி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதுதொடர்பான வழக்‍கு இன்று மீண்டும் விசாரணைக்‍கு வருவதாக இருந்தது. ஆனால், இன்றைய தினம் விசாரணைக்‍கு எடுத்துக்‍கொள்ள முடியாததால், முக்‍கிய வழக்‍காக வரும் 27-ஆம் தேதி இது விசாரிக்‍கப்படும் நீதிபதி தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00