சிசிடிவி கேமரா மூலம் வீடு கண்காணிப்பு : முதலமைச்சர் நிதிஷ் குமார் மீது லாலு மகன் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

Nov 16 2018 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

சக்தி வாய்ந்த சிசிடிவி கேமரா மூலம், தனது வீட்டை, பீகார் முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார் கண்காணிப்பதாக, அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் திரு. தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் முதலமைச்சர் திரு. நிதிஷ் குமாரின் அரசு இல்லம் தலைநகர் பாட்னாவில் உள்ள சர்க்குலர் சாலையில் அமைந்துள்ளது. இவரது வீட்டுக்கு பின்னால், திரு. லாலு பிரசாத் யாதவின் மகனும், பீகார் எதிர்க்‍கட்சி தலைவருமான திரு. தேஜஸ்வி யாதவ் வீடு உள்ளது. திரு. நிதிஷ் குமார் வீட்டின் சுற்றுச்சுவர்களில் புதிய சிசிடிவி கேமராக்‍கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரு. தேஜஸ்வி யாதவ், டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், முதல்வர் வீட்டுக்கு பின்புறம் உள்ள தனது இல்லத்தை நோக்கி, தன்னை கண்காணிப்பதற்காகவே சக்தி வாய்ந்த சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00