பாபர் மசூதி இடிப்பு தினம் கடைப்பிடிப்பு - ரயில், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்‍கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Dec 6 2018 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலும், புறநகர்களை இணைக்கும் மின்சார ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகள், சோதனைக்‍குப் பின்னரே அனுமதிக்‍கப்படுகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி விமான நிலையம், துறைமுகம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையத்தில் சோதனையிடுகின்றனர். பயணிகளின் உடைமைகள் சோதனைக்‍குப் பின்னரே அனுமதிக்‍கப்படுகிறது.

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, விழுப்புரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், காய்கறி மார்கெட் உள்ளிட்ட இடங்களில் போலீசார் மோப்ப நாய் மற்றும் அதிநவீன கருவிகளுடன் தீவிர சோதனை நடத்தினர்.

திருச்சி விமான நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்படை போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, இரண்டடுக்கு வளையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விமானநிலையத்தினுள் வரும் வாகனங்கள் மற்றும் பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. பயணிகள் அறை மற்றும் காத்திருப்பு அறைகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00