புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏ-க்‍களின் நியமனம் செல்லும் - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

Dec 6 2018 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புதுச்சேரியில் கடந்த ஆண்டு பா.ஜ.க மாநிலத்தலைவர் திரு. சுவாமிநாதன், பொருளாளர் திரு. சங்கர், பா.ஜ.க ஆதரவாளர் திரு. செல்வகணபதி ஆகிய 3 பேரை எம்.எல்.ஏக்‍களாக, துணைநிலை ஆளுநர் நியமனம் செய்தார். இவர்களது நியமனத்தை ஏற்றுக்‍கொள்ள முடியாது எனக்‍கூறி அவர்களுக்கு சட்டப்பேரவைக்‍குள் அனுமதி மறுக்‍கப்பட்டது.

இதனை எதிர்த்து நியமன எம்.எல்.ஏ.க்‍கள் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்தனர். இந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்‍கள் நியமனத்தை ரத்து செய்யக்‍கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. வழக்‍கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இவர்களது நியமனம் செல்லும் என கடந்த மார்ச் 22ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்தார். விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி. ஏ.கே.சிக்‍ரி தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என ​தீர்பளித்த நீதிபதிகள், எம்.எல்.ஏ-க்‍களை நியமனம் செய்ய துணைநிலை ஆளுநருக்‍கு அதிகாரம் உண்டு என தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00