எல்லையில் தீவிரவாத தாக்‍குதல்களில் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையை விட சாலை பள்ளங்களில் விழுந்து உயிரிழப்போர் எண்ணிக்‍கை அதிகம் - உச்சநீதிமன்றம் வேதனை

Dec 6 2018 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாலைகளில் உள்ள பள்ளங்களில் விழுந்து உயிரிழப்போரின் எண்ணிக்கை, எல்லையில் தீவிரவாத தாக்‍குதல்களில் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

சாலைகளில் உள்ள பள்ளங்களால் கீழே விழுந்து உயிரிழப்போரின் எண்ணிக்‍கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகக்‍ கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதின்ற நீதிபதிகள் திரு. மதன் பி லோகூர், திரு. தீபக் குப்தா மற்றும் திரு. ஹேமந்த் குப்தா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களினால், கடந்த 5 ஆண்டுகளில் 14 ஆயிரத்து 926 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது கவலை அளிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். சாலைகளில் உள்ள பள்ளங்கள் காரணமாக உயிரிழப்பு ஏற்படுவது, அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், சாலைப் பராமரிப்பில் அக்‍கறையில்லாமல் இருப்பதை காட்டுவதாக அவர்கள் விமர்சித்தனர். இது குறித்து 2 வாரங்களுக்‍குள் பதிலளிக்‍க மத்திய அரசுக்‍கு உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00