கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு : இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் அபாயம்

Dec 7 2018 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் சவுதி அரேபியா தலைமையிலான ஒபெக் நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது குறித்து உறுப்பு நாடுகள் அதிருப்தி தெரிவித்தன. விலையை உயர்த்தும் பொருட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் நாடுகள் ஒருமனதாக தீர்மானித்துள்ளன. ஒபெக் கூட்டமைப்பில் இடம்பெறாத ரஷ்யாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அறிய, அந்நாட்டுடன், இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதன்பிறகு, கச்சா எண்ணெய் உற்பத்தியை எவ்வளவு குறைப்பது என்று தீர்மானிக்‍கப்படவுள்ளது. அவ்வாறு நடந்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும். சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிப்பதால், அவற்றின் விலை கடுமையாக உயரும் என்று அஞ்சப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00