நாடாளுமன்ற குளிர்காலக்‍ கூட்டத்தொடரில் பிரச்னைகளை விவாதிக்‍க அரசு தயாராக உள்ளது - அனைத்துக்‍ கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி

Dec 10 2018 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பிரச்சனைகளை விவாதிக்‍க அரசு தயாராக உள்ளதாக அனைத்துக்‍ கட்சிக்‍ கூட்டத்தில் பிரதமர் திரு.நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.

நாடாளுமன்றக்‍ குளிர்கால கூட்டத்தொடர், நாளை தொடங்கி, அடுத்த மாதம் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முத்தலாக் மசோதா, இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் நிறுவனங்கள் அவசர சட்டதிருத்த மசோதாக்களை, இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே வேளையில், உத்தரபிரதேச வன்முறை, உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி, ஆளும் பாரதிய ஜனதாக்‍கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்‍கட்சிகள் அனல் பறக்கும் விவாதங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே, இரு அவைகளிலும் பணிகள் முடங்காமல், குளிர்கால கூட்டத் தொடரை, அமளியின்றி சுமூகமாக நடத்துவதற்காக, இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்தக்‍ கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திரமோடி, நாடாளுமன்ற குளிர்காலக்‍ கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்‍க அரசு தயாராக இருப்பதாகவும், கூட்டத் தொடர் ஆக்‍கபூர்வமாக இருக்‍கவேண்டும் என்பதையே தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00