பெங்களுருவில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கி விபத்து - விமானி பரிதாப மரணம்
Feb 1 2019 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெங்களுருவில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், விமானி பரிதாபமாக உயிரிழந்தார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் விமான நிலையம் அமைந்துள்ளது. இன்று அங்கு மிராஜ் 2000 ரக விமானப்படை விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய 2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு விமானி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமான விபத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவ இடத்திற்கு சென்ற விமானத்துறை தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த விமானத்தை உடனடியாக அணைத்தனர். இச்சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.