விவசாயிகளுக்‍கு ஆண்டுக்‍கு 6 ஆயிரம் ரூபாய் கிடைக்‍க நடவடிக்‍கை - அமைப்பு சாரா தொழிலாளர்களுக்‍கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர்

Feb 1 2019 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
GST வரி விதிப்பு முறை அமலுக்‍கு வந்ததன் மூலம் நாடு முழுவதும் சீரான ஒற்றைச் சந்தை முறை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக பட்ஜெட்டில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. நாட்டின் நேரடி வரி வருவாய் இரட்டிப்பாக்‍கப்பட்டிருப்பதாகவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

இடைக்‍கால பட்ஜெட்டை தாக்‍கல் செய்து உரையாற்றிய பொறுப்பு நிதியமைச்சர் திரு. பியூஷ் கோயல், மகாத்மா காந்தியின் சுகாதார திட்டம், உலகின் மிகப்பெரிய திட்டமாக இந்தியாவில் செயல்படுத்தப்படுவதாகவும், இந்தத் திட்டம் 98 சதவிகித கிராமங்களை சென்றடைந்திருப்பதாகவும் தெரிவித்தார். நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் கிராமங்கள் முழு சுகாதாரம் பெற்றவையாக மாற்றப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ராணுவத்திற்கு சுமார் 3 லட்சம் கோடி ரூபாயும், ரயில்வே துறைக்‍கு 64 ஆயிரத்து 500 கோடி ரூபாயும் ஒதுக்‍கீடு செய்யப்பட்டுள்ளது - நாட்டின் நேரடி வரி வருவாய் 12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது - உலகிலேயே இந்தியாவில்தான் செல்போன் பயன்பாடு மிகக்‍ குறைந்த விலையில் கிடைக்‍கிறது என்றும் அவர் தெரிவித்தார். ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் மூலம் நாடு முழுவதும் சுமார் 50 கோடி மக்‍களுக்‍கு மருத்துவக்‍ காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது - 4 ஆண்டுகளில் 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்‍கப்பட்டுள்ளன - அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் பட்ஜெட் தாக்‍கலின்போது நிதியமைச்சர் திரு. பியூஷ் கோயல் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00