நாட்டின் பணவீக்‍க விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - நடப்பு நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் தாக்‍கலின்போது நிதியமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு

Feb 1 2019 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடப்பு நிதியாண்டுக்‍கான பட்ஜெட் மக்‍களவையில் இன்று தாக்‍கல் செய்யப்பட்டது. பொருளாதார வளர்ச்சியில் நாடு 6வது இடத்தை பெற்றுள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடு முதலீடுகளை இந்தியா அதிக அளவில் ஈர்த்துள்ளதாகவும் இடைக்‍கால பட்ஜெட்டை தாக்‍கல் செய்து பேசிய நிதியமைச்சர் திரு. பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிவடைய இருப்பதால், நாடாளுமன்றத்தில் இன்று இடைக்‍கால பட்ஜெட் தாக்‍கல் செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டிற்கான இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பு வகிக்‍கும் திரு. பியூஷ் கோயல் தாக்‍கல் செய்தார். அப்போது பேசிய அவர், ஊழலற்ற, உறுதியான அரசை பிரதமர் மோடி அளித்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். இந்த ஆட்சியில் நாடு பல்வேறு இலக்‍குகளையும், வளர்ச்சி நிலைகளையும் எட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பட்ஜெட்டின் பல்வேறு சிறப்பு அம்சங்களை அவர் வெளியிட்டார். நாட்டின் பணவீக்‍க விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்‍கு ஆண்டுக்‍கு 6 ஆயிரம் ரூபாய் கிடைக்‍க நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டிருப்பதாகவும் கூறினார். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்‍கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் - ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்‍கீடு போன்ற பல்வேறு அறிவிப்புகளையும் திரு. பியூஷ் கோயல் வெளியிட்டார்.

கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீடுகளை இந்தியா அதிக அளவு ஈர்த்துள்ளதாக தெரிவித்த அவர், ஜி.எஸ்.டி.-யால் வரிவிதிப்பு எளிமையாக்‍கப்பட்டுள்ளதாகவும், வாராக்‍கடனாக இருந்த 3 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்‍கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 2022ம் ஆண்டுக்‍குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் - பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை ஏற்றம் அடைய செய்ய கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்‍கீடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00