தனிநபர் வருமான வரி உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்வு - மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு

Feb 1 2019 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு இரண்டரை லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாத நிலையில், இன்றைய இடைக்‍கால பட்ஜெட்டில் 5 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு முழு வரி விலக்‍கு அறிவிக்‍கப்பட்டுள்ளது. இதன்மூலம் வரி செலுத்துவதற்கான உச்ச வரம்பு இரண்டரை லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பால் 3 கோடி பேர் பயனடையவுள்ளனர்.

மேலும், ஆறரை லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுவோர், பங்கு பத்திரங்களில் முதலீடு செய்தால் முழு வரிவிலக்‍கு பெறலாம் என்றும் அறிவிக்‍கப்பட்டுள்ளது. வருமானவரி கணக்‍கு தாக்‍கலை 24 மணி நேரத்தில் சரிபார்க்‍கும் புதிய திட்டமும் அமல்படுத்தப்படும் என்றும் திரு. பியுஷ் கோயல் தெரிவித்தார்.

வீட்டு வாடகையிலிருந்து வரும் வருமானத்திற்கும் 1 புள்ளி 8 லட்சம் ரூபாயிலிருந்து 2 புள்ளி 4 லட்சம் ரூபாயாக உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. 2வது வீடு வாங்குபவர்களுக்‍கும் வரிச்சலுகை வழங்கப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்‍கான வரிச்சலுகை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது போன்ற அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00