நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் : பாஜக தலைவர்கள் வரவேற்பு
Feb 1 2019 5:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டை பாஜக தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
பாஜக வாக்குவங்கி அரசியலில் ஈடுபடாமல், மக்கள் வளர்ச்சிக்கான அரசியலில் ஈடுபடுவதை பட்ஜெட் அறிவிப்புகள் காட்டுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மோடியின் நலத்திட்டங்களைக் கண்டு எதிர்கட்சிகள் அஞ்சி நடுங்குவதாகவும் அவர் கூறினார்.
பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட திட்டங்கள் ஒவ்வொன்றும் சிறந்தவை என்றும், இதுபோன்ற வேலைகள் தொடரும் என்றும் மக்களவை சபாநாயகர் திருமதி.சுமித்ரா மகாஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட், வரலாற்று சிறப்பு மிக்க பட்ஜெட் என மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்த திட்டம் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று கூறினார்.
நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் திரு.அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். பிரதமரின் ஒய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட உள்ளதாகவும் கூறினார்.