வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்‍களிக்‍க, மின்னணு வாக்‍குப்பதிவு இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்படும் - தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மீண்டும் உறுதி

Feb 1 2019 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்‍கள் வாக்‍களிக்‍க, மின்னணு வாக்‍குப்பதிவு இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்‍குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பிருப்பதாக பெரும்பாலான அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், முறைகேடுகள் நடக்‍க வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது. இந்நிலையில், வரும் மக்‍களவை தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா, பொது தேர்தலில் வாக்‍குப்பதிவு இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அத்துடன், வாக்காளர் பதிவு செய்யும் ஓட்டை உறுதி செய்துக்கொள்ள 'விவிபேட்' கருவி பொருத்தப்படும் என்றும் அவர் கூறினார். மீண்டும் பழைய வாக்‍குச்சீட்டு முறைக்‍கு செல்ல வாய்ப்பில்லை என்று, சுனில் அரோரா சில தினங்களுக்‍கு முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00