மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் - மாநில தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு ஆளுநர் கே.என்.திரிபாதி அழைப்பு விடுத்ததால் பரபரப்பு
Feb 4 2019 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்கு வங்க மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை அடுத்து அதிகாரிகளுக்கு மாநில ஆளுநர் திரு.கே.என்.திரிபாதி அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கட்டா மெட்ரோ ரயில் நிலையம் முன்பு முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தை துவங்கியதை அடுத்து, மேற்கு வங்க மாநில தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு அம்மாநில, ஆளுநர் திரு.கே.என்.திரிபாதி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் சி.பி.ஐ., இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ், செய்தியாளர்களிடம் பேசும்போது, மேற்கு வங்க மாநிலத்தில் சி.பி.ஐ.,யினருக்கு போலீஸ் ஒத்துழைக்க மறுப்பது குறித்து, இன்று உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவ்டேகர், இன்று கொல்கத்தா செல்ல உள்ளார்.