சி.பி.ஐ. நடவடிக்‍கையைக்‍ கண்டித்து, கொல்கத்தாவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர்கள் கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் ஆதரவு

Feb 5 2019 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -
சிபிஐ நடவடிக்கையை கண்டித்து மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி மேற்குகொண்டுள்ள தர்ணா போராட்டத்திற்கு, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பாசிச சக்திகளை எதிர்த்து ஓரணியில் அணி திரள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு, கொல்கத்தாவில் நடக்கும் விவகாரங்கள் கண்டனத்திற்குரியவை என்றும், அரசியலமைப்பை பாதுகாக்க மம்தா பானர்ஜிக்கு துணை நிற்போம் என தெரிவித்துள்ளார்.

டெல்லி மாநில முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியுடன் பேசியதாகவும், பிரதமர் மோடி, அமித்ஷாவின் நடவடிக்கைகள் வினோதமாகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

உத்தரபிர‍‌தேச முன்னாள் முதலமைச்சர் திரு.அகிலேஷ்யாதவ், பா.ஜ.க. நேர்மையற்ற வழியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க விரும்புகிறது என்றும், சி.பி.ஐ தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார். மேலும், இது ஜனநாயக விரோதமானது என்றும், அரசியலமைப்பு மாண்பிற்கு எதிரானது" தெரிவித்தார்.

இதேபோல் உமர்அப்துல்லா, மாயாவதி, சரத்பவார் உள்ளிட்ட பல தலைவர்களும் ‍செல்வி மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00