குடிநீர் தேவை நிறைவடைந்த பின்பே ஆலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Feb 4 2019 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடிநீர் தேவை நிறைவடைந்த பின்பே தாமிரபரணி தண்ணீரை ஆலைகளுக்‍கு வழங்க வேண்டும் என தூத்துக்‍குடி மாவட்ட ஆட்சியருக்‍கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாமிரபரணி தண்ணீரை குடிநீர் தேவைக்‍கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தூத்துக்‍குடி தொழிற்சாலைகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. இந்த வழக்‍கு நீதிபதிகள் திரு.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது, தூத்துக்‍குடி மக்‍களின் குடிநீர் தேவை நிறைவடைந்த பின்பே தாமிரபரணி தண்ணீரை ஆலைகளுக்‍கு வழங்குவது குறித்து பொதுப்பணித்துறை, குடிநீர் வாரியத்துடன் ஆலோசனை நடத்தி ஒருவாரத்தில் முடிவு செய்ய வேண்டும் என தூத்துக்‍குடி மாவட்ட ஆட்சியருக்‍கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதுவரை ஆலைகளுக்‍கு தண்ணீர் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். மேலும், தாமிரபரணி தண்ணீரை தொழிற்சாலைகளுக்‍கு பயன்படுத்துவது குறித்து தமிழக அரசு 3 வாரத்திற்குள் மத்திய அரசுக்‍கு அறிக்‍கை அளிக்‍க வேண்டும் என்றும் மத்திய அரசு அதன் மீது 2 மாதத்திற்குள் முடிவெடுக்‍க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00