சிபிஐ அதிகாரிகளின் விசாரணை நடவடிக்கைகளை கண்டித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பார்ஜி 3வது நாளாக போராட்டம் - பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு

Feb 5 2019 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
சிபிஐ அதிகாரிகளின் விசாரணை நடவடிக்கைகளை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மூன்றாவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகிறார்.

சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் திரு.ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சென்றனர். அவர்களை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சிபிஐ நடவடிக்‍கைக்‍கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, 3வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்கிறார். தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செல்வி மம்தா பானர்ஜி, அங்கிருந்த படியே அரசு பணிகளை கவனித்து வருகிறார். அவருக்‍கு பல்வேறு கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜியை தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்றிரவு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ்வும் ஆதரவு தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00