நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை : அனைத்து மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கு ராகுல் காந்தி ஏற்பாடு
Feb 7 2019 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, நாளை மறுநாள் அனைத்து மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கு ராகுல் காந்தி ஏற்பாடு செய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மத்தியில் நடக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன.
சில மாநிலங்களில் உள்ள கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் வெளியிடப்பட்டு, வேட்பாளர்கள் தேர்வுக்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக நாளை மறுநாள், டெல்லியில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு ராகுல் காந்தி ஏற்பாடு செய்துள்ளார்.
தேர்தல் கூட்டணி குறித்தும், வெற்றி வாய்ப்பு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் வரும் 9-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.