பிரதமர் மோடி தொடங்கி வைத்த புல்லட் ரயில் திட்டத்திற்கு எதிர்ப்பு : குஜராத்தில் ஆயிரக்‍கணக்‍கான விவசாயிகள் கண்டனப் பேரணி

Feb 7 2019 6:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
குஜராத் மாநிலத்தில் புல்லட் ரயில் திட்டத்திற்கு விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்‍கணக்‍கான விவசாயிகள் கண்டனப் பேரணி நடத்தினர்.

மும்பையிலிருந்து அகமதாபாத் வரையிலான புல்லட் ரயில் திட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் திரு.மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்காக குஜராத் மாநிலத்தில் நவசாரி, சூரத் ஆகிய மாவட்டங்களில் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. வளமான விளைநிலங்களை ஏக்‍கருக்‍கு 10 லட்சம் என்ற விலையில் அரசு கையகப்படுத்துகிறது. இந்த நிலங்களின் சந்தை விலையோ, ஏக்‍கர் ஒரு கோடி ரூபாயாக உள்ளது. இதனால் விவசாயிகள் கொந்தளித்துள்ளனர். இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வழக்‍கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நவசாரி பகுதியில் 29 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பேரணி நடத்தினர். இவர்கள், 280 கிலோமீட்டர் நடந்து வந்து அகமதாபாத்தில் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்கத்தலைவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00