இறந்தவர்களின் உடலை அடையாளம் காண ஆதாரைப் பயன்படுத்துவது சாத்தியமற்றது - தனிநபர் அடையாள ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல்

Feb 8 2019 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
இறந்தவர்களின் உடலை அடையாளம் காண ஆதாரைப் பயன்படுத்துவது சட்டப் படியும், தொழில்நுட்ப வழியிலும் சாத்தியமற்றது என தனிநபர் அடையாள ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அடையாளம் தெரியாத இறந்த உடல்களை அடையாளம் காண ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைப் பயன்படுத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், பயோமெட்ரிக், கருவிழி தகவல்கள் ஆதார் எடுக்க அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை நிர்வாக வசதிக்காகவும், வெளிப்படைத் தன்மையுடன் மானியம் வழங்கவும் உருவாக்கப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாருக்காக எடுக்கப்படும் ஒருவரின் தனிப்பட்ட அடையாளங்களை, இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணப் பயன்படுத்துவது, சட்டப்படியும், தொழில்நுட்ப வழியிலும் சாத்தியமற்றது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றை தவிர வேறு எதற்கும் ஆதாரை பயன்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும் தனிநபர் அடையாள ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00