மதசார்பாற்ற ஜனதாதள எம்எல்ஏவை பாஜகவில் இணைக்க பேரம் பேசியதாக ஆடியோ வெளியான விவகாரம் - தனது தவறை எடியூரப்பா ஒப்புக் கொண்டதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி விமர்சனம்
Feb 12 2019 12:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஜத எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் தவறை எடியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளார் என கர்நாடக முதலமைச்சர் திரு.குமாரசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் திரு.குமாரசாமி, நாகனகெளடாவின் மகன் சரண்கெளடாவுடன் தான் பேசியது உண்மைதான் என்று எடியூரப்பா ஒப்புக் கொண்டிருக்கிறார். இதன்மூலம் தனது தவறை எடியூரப்பா ஒப்புக் கொண்டிருக்கிறார். மஜதவில் சேர்ந்து ஆட்சியைக் காப்பாற்றுங்கள் என்று எந்த பாஜக எம்எல்ஏவிடமும் கெஞ்சவில்லை. மேலும், எந்த பாஜக எம்எல்ஏவையும் பணத்தாசை காட்டி பேரம் பேசியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஹுப்பள்ளியில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் தொடக்க விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்துகொண்டிருக்கிறார் என்றும், இந்த நிகழ்ச்சிகளுக்கு மாநில முதல்வராக தனக்கு முறையான அழைப்பு விடுக்கவில்லை என்றும், மாநிலத்தின் முதல்வரை அழைக்காமல், மத்திய பாஜக அரசு கீழ்த்தரமான அரசியலை நடத்துகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.