ஆந்திராவுக்‍கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக்‍ கண்டித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் உண்ணாவிரதம் - கோரிக்‍கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக எச்சரிக்‍கை

Feb 11 2019 4:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டெல்லியில் ஆந்திர முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அவரை நேரில் சந்தித்த திரு.ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்தார்.

ஆந்திராவில் பிரிக்‍கப்ட்டதால், ஏற்படும் பொருளாதார இழப்பை சரிகட்ட சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கப்படும், என்ற வாக்குறுதியை மத்திய அரசு இதுவரை நிறைவேற்ற​வில்லை. இதானல் பா.ஜ.க கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு விலகினார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வரும் தெலுங்கு சேதம் எம்.பி.க்‍கள், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக்‍ கண்டித்து அம்மாநில முதலமைச்சர் திரு. சந்திரபாபுநாயுடு டெல்லி ஆந்திரா பவன் வளாகத்தில், உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். தெலுங்கு தேசம் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆந்திர மாநில அரசு பணியாளர்கள் சங்கங்க தலைவர்கள் மாணவ சங்க பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். அவரை நேரில் சந்தித்த காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன்சிங், மற்றும் ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் திரு.பரூக் அப்துல்லா ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது உரையாற்றிய திரு.ராகுல்காந்தி, பிரதமர் மோடி, எங்கு சென்றாலும் பொய் சொல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்றும், அவர் நம்பகத்தன்மையை பெறவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், பிரதமர் ஆந்திரா மக்களுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என்று கூறிய ராகுல்காந்தி, தான் ஆந்திரா மக்களுக்கு எப்போது துணை நிற்பேன் என தெரிவித்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி குடியரசுத்தலைவர் திரு.ராம்நாத் கோவிந்தை நாளை நேரில் சந்தித்து திரு.சந்திரபாபு நாயுடு மனு அளிப்பார் என தெரிகிறது.

ஆந்திராவுக்‍கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பாக தேர்தல் நேரத்தின்போது கொடுக்‍கப்பட்ட வாக்‍குறுதியை பிரதமர் நிறைவேற்ற வேண்டும் என்றும், தனிநபர் மீதான தாக்‍குதலை அவர் நிறுத்திக்‍கொள்ள வேண்டும் என்றும் ஆந்திர முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00