இடஒதுக்கீடு கேட்டு குஜ்ஜார் சமூகத்தினர் நடத்தும் போராட்டம் மேலும் தீவிரம் - இணையதள சேவையை முடக்‍கி மாவட்ட நிர்வாகம் நடவடிக்‍கை

Feb 12 2019 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராஜஸ்தானில் இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில அரசு வாக்குறுதி அளித்தது. 2017-ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இடஒதுக்கீட்டுக்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இடஒதுக்கீடு வழங்க இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைந்து அங்கு காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அரசு வாக்குறுதி அளித்தபடி, 5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி, ரயில் மறியல் போராட்டதில் குஜ்ஜார் மக்கள் ஈடுபட்டுள்ளனர். மாதோபூர் மாவட்டத்தில் போராட்டம் தீவிரமடைந்திருப்பதால், அங்கு நாளை வரை இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதி வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00