முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குடியரசுத்தலைவர் ராம்நாத் ‍கோவிந்திடம் கோரிக்கை - ஆந்திராவுக்‍கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தல்

Feb 12 2019 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் குடியரசுத்தலைவர் திரு.ராம்நாத் கோவிந்தை சந்தித்த ‍முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை வழங்கினார்.

ஆந்திரா, தெலங்கானா என இருமாநிலங்களாக பிரிக்‍கப்பட்டதால், ஏற்படும் பொருளாதார இழப்பை சரிகட்ட ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று டெல்லியில், முதலமைச்சர் திரு. சந்திரபாபுநாயுடு ஆந்திரா பவன் வளாகத்தில், உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங், டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, இன்று கோரிக்கையை வலியுறுத்தி, திரு.சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் குடியரசுத்தலைவர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

அதைத்தொடர்ந்து குடியரசுத்தலைவர் திரு.ராம்நாத் கோவிந்தை சந்தித்த திரு.சந்திரபாபு நாயுடு, அவரிடம் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, கோரிக்கை மனுவை அளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00