புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல் - ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்‍குப்பதிவு

Feb 12 2019 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டம் மீண்டும் அமலான நிலையில், ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் விதிமுறைகளை மீறிச்சென்ற 11 ஆயிரத்து 260 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரியில் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து கட்டாய ஹெல்மெட் திட்டம் தளர்த்தப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்வதை படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதுடன் கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை மீண்டும் அமல்படுத்த டிஜிபி சுந்தரி நந்தா தெரிவித்தையடுத்து மீண்டும் நேற்று முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிந்து பயணம் செல்லும் நிலையில், ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளின் வாகன எண்கள் பதிவு செய்து சம்மன் அனுப்பட்டு நீதிமன்றம் மூலம் அபராதம் செலுத்த போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன்படி நேற்று ஒருநாள் மட்டும் ஹெல்மெட் அணியாமல் விதிமுறைகளை மீறிச்சென்ற 11 ஆயிரத்து 260 பேர் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00