ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை - மாநிலங்களவையில் தாக்கல்

Feb 14 2019 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்த கணக்‍கு தணிக்‍கை அறிக்‍கை மாநிலங்களவையில் இன்று தாக்‍கல் செய்யப்பட்டது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு.பொன்.ராதா கிருஷ்ணன் அறிக்‍கையை தாக்‍கல் செய்தார். இன்று தாக்‍கல் செய்யப்பட்டுள்ள 141 பக்‍க சிஏஜி அறிக்‍கையில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்‍கிய முற்போக்‍கு கூட்டணி அரசின் ஒப்பந்த விலையை விட, தற்போதைய பா.ஜ.க. அரசு, 2 புள்ளி 86 சதவீதம் குறைவான விலையில் ரஃபேல் ஒப்பந்தத்தை செய்துள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அதே நேரம் அமைச்சர்கள் கூறுவது போல், விமான விலை 9 சதவீதம் குறைக்கப்படவில்லை என்றும், தற்போதைய அரசு கோரிய கூடுதல் வசதிகளால்தான் ரஃபேல் விமான விலை அதிகரித்ததாகவும் அறிக்‍கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00