வங்கிகளிடம் இருந்து பெற்ற கடனை முழுமையாக திருப்பி கொடுக்‍க முன்வந்ததாக விஜய்மல்லையா டுவிட்டரில் தகவல் - கிங் ஃபிஷ்ஷர் நிதியில் இருந்து கடனை பெற்றுக்‍ கொள்ளும் தனது யோசனையை வங்கிகள் ஏற்கவில்லை என்றும் குற்றச்சாட்டு

Feb 14 2019 4:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிங்பிஷர் நிறுவனத்திடம் இருந்து தனது ​கடன் தொகையை பெற்று கொள்ளும் படி, தான் தெரிவித்த யோசனையை, வங்கிகள் ஏற்க மறுப்பதாக திரு. விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் திரு. விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் இருந்து சுமார் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். தப்பியோடிய அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்‍கத்தில் திரு. விஜய் மல்லையா பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இதில், முழு கடன் தொகையையும் செலுத்த தயாராக உள்ளதாகவும், அந்த தொகையை கிங் பிஷர் நிறுவனத்தின் பொது நிதியில் இருந்து எடுத்துக் கொள்ளும்படி கூறிவிட்டதாகவும், குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது கோரிக்கைகளை வங்கிகள் ஏற்காதது குறித்து வங்கிகளிடம் பிரதமர் கேள்வி கேட்காதது ஏன்? எனறும் கேள்வி எழுப்பியுள்ளார். நேர்மையாக, கடன் தொகையை திருப்பி செலுத்த தயாராக இருப்பதை, வங்கிகள் ஏற்க மறுப்பது ஏன்? என்றும் அடுக்‍கடுக்‍காக திரு. விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00