4ஜி சேவையை கொண்டுவராமல் தனியார் நிறுவனங்களுக்‍கு ஆதரவாக செயல்படும் பி.எஸ்.என்.எல் நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் - ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

Feb 18 2019 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

4 ஜி சேவையை கொண்டுவராமல் தனியார் நிறுவனங்களுக்‍கு ஆதரவாக செயல்படும் பி.எஸ்.என்.எல் நிர்வாகத்திற்கு கண்டனம் தெவித்து ஊழியர்கள் இன்று முதல் மூன்று நாள் போராட்த்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் பி.எஸ்.என்.எல் அலுவலகங்களில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மத்திய அரசு அழிக்க நினைப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது அடக்குமுறையை கையாள்வதாகவும், ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில், ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3 நாட்களுக்குள் அரசு தங்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 700 ஊழியர்கள், வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனனர். இதில், பிஎஸ்என்எல் ஊழியர்களின் 5 கூட்டமைப்பினர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 400 ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக, மூன்று நாட்களுக்கு தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் bsnl பொது மேலாளர் அலுவலகம் முன் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து BSNL ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் திட்டத்தை கைவிடக் கோரியும் ,பிஎஸ்என்எல் க்கு 4Gஅலைவரிசை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும்,போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00