முத்தலாக் உள்பட 4 அவசர சட்டங்களுக்கு அனுமதி : மந்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

Feb 20 2019 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

முத்தலாக் உள்பட 4 அவசர சட்டங்களுக்கு மந்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய அமைச்சர‌வை கூட்டம் நேற்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. இதில், முத்தலாக் முறைக்கு எதிரான முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு, இந்திய மருத்துவ கவுன்சிலின் இடைக்கால கமிட்டி, கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மற்றும் சீட்டு கம்பெனி நிதிநிறுவனங்கள் , ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதி திட்டங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் ஆகிய 4 அவசர சட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இவை அனைத்தும் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாததால் காலாவதியாகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மின்னணு கொள்கை உருவாக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்மூலம் 2025-ம் ஆண்டுக்குள் 1 கோடி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், 28 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் மின்னணு உற்பத்தி தொழில்களை உருவாக்குவது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00