அரசு முறை சுற்றுப்பயணமாக சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியா வருகை - பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு குறித்து பிரதமர், குடியரசுத் தலைவருடன் பேச்சுவார்த்தை

Feb 20 2019 6:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை, டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக வரவேற்றார்.

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசுமுறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் இரண்டு நாட்கள் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பாகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்த சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான், தனி விமானம் மூலம் நேற்றிரவு டெல்லி வந்தடைந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக வரவேற்றார். வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங்கும் உடனிருந்தார்.

பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சவுதி இளவரசர் இன்று சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00