மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் சதித்திட்டம் - உளவுத்துறை எச்சரிக்‍கையால் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

Feb 22 2019 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய பாதுகாப்பு படையினருக்கு கடுமையான உயிர்ச்சேதம் ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படை தாக்‍குதலில், 40க்‍கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதுபோன்ற தாக்‍குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக, கடந்த 8ம் தேதியே உளவுத்துறை ஏற்​கெனவே எச்சரித்திருந்ததாகவும், ஆனால் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்பட வில்லை என்றும் புகார் எழுந்தது.

புல்வாமா சம்பவத்தால் நாடே கொதிப்படைந்து காணப்படும் சூழலில், மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

3 தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் உள்பட 21 தீவிரவாதிகள் இதற்காக சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எச்சரிக்கையை அடுத்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00