அருணாச்சல பிரதேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பயங்கர வன்முறை - துணை முதலமைச்சர் வீடு மற்றும் அரசு வாகனங்கள் தீ வைத்து எரிப்பு - போலீசார் நடத்திய துப்பாக்‍கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்ததால் பதற்றம்

Feb 25 2019 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
அருணாச்சலப் பிரதேச அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. கலவரகாரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்ததால், அம்மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

அருணாச்சல பிரதேசத்தை பூர்வீகமாக கொள்ளாமல் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் உள்ளிட்ட சில இனத்தவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் இடாநகரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, இளைஞர் ஒருவர் துப்பாக்‍கிச்சூட்டில் பலியானார். இதனைக்‍ கண்டித்து பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அம்மாநில துணை முதலமைச்சர் சௌவனா மெயினுக்கு சொந்தமான பங்களாவும் சூறையாடப்பட்டன. இடாநகர் மாவட்ட கண்காணிப்பாளர் வீடு சூறையாடப்பட்ட நிலையில், 50-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்‍கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர். அசாதரண சூழலை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போலீசார் திணறி வருவதையடுத்து, ராணுவத்தினர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

இதனிடையே, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், முதலமைச்சர் திரு. பேமா கண்டுயிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00