பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகளை காப்பது குறித்த வழக்கு : மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீர் அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Feb 25 2019 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாதுகாப்பு படை வீரர்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான வழக்கில், மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராணுவ அதிகாரிகளின் மகள்களான பிரீதி கேதார் கோகலே, கஜல் மிஷ்ரா ஆகியோர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், பாதுகாப்பு படைகளில் பணியாற்றுவோரின் மனித உரிமைகளை பாதுகாக்க விரிவான கொள்கை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளனர்.

பணியின்போது தனிநபர்களாலும், கட்டுக்கடங்காத கும்பல்களாலும் தாக்கப்படுகிற பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக இந்த வழக்‍கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகளை காப்பது தொடர்பாக, மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றிடம் விளக்‍கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00