பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை நடத்திய தாக்‍குதலில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு -​ பாகிஸ்தான் பதில் தாக்‍குதல் நடத்தக்‍கூடும் என்பதால் உஷார் நிலையில் ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை

Feb 27 2019 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்‍குதல் நடத்தியுள்ளது. எல்லையில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் இருநாட்டு எல்லைப்பகுதியில் பதற்றம் அ‌திகரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40-க்‍கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. இந்த​தாக்‍குதலுக்‍கு பதிலடி கொடுக்‍கும் விதமாக பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் தாக்‍குதல் நடத்தியுள்ளன.

பாகிஸ்தான் பகுதியில் எல்லைக்‍கட்டுப்பாட்டு கோடு ​அருகே உள்ள முகாம்கள் மீது இன்று அதிகா‌லை 3.30 மணியளவில், 12 இந்திய போர் விமானங்கள், ஆயிரம் கிலோ கிராம் எடைகொண்ட குண்டுகள் வீசப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில், 200க்‍கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தான் பதில் தாக்‍குதல் நடத்தக்‍கூடும் என்பதால், எல்லையில் பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. எல்லையில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டதால், இருநாட்டு எல்லைப்பகுதியில் பதற்றம் அ‌திகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00