டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவைக் குழு அவசர ஆலோசனை - இஸ்லமாபாத்திலும் அவசரக்‍கூட்டம் நடைபெற்றதால் போர் பதற்றம் அதிகரிப்பு

Feb 27 2019 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்துள்ள பரபரப்பான சூழலில், இரு நாடுகளிலும் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது விமானப்படை மூலம் தாக்குதல் நடத்துவது என்ற முடிவை பிரதமர் திரு. மோடியே எடுத்ததாக கூறப்படுகிறது. அதன்படி இன்று அதிகாலை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது.

தாக்குதல் குறித்த விவரங்களை, பிரதமர் திரு. மோடியிடம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கி கூறியுள்ளார். இந்த தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லியில், பாதுகாப்பு அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ், நிதியமைச்சர் திரு. அருண் ஜேட்லி உள்ளிட்டோருடன் பிரதமர் திரு. மோடி முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் நாளை நடைபெறவுள்ள எதிர்க்‍கட்சிகளின் கூட்டத்திலும் இது குறித்து ஆலோசிக்‍கப்பட உள்ளது.

பாகிஸ்தானிலும் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷாமுகமது, இஸ்லாமாபாத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3019.00 Rs. 3229.00
மும்பை Rs. 3042.00 Rs. 3221.00
டெல்லி Rs. 3054.00 Rs. 3235.00
கொல்கத்தா Rs. 3055.00 Rs. 3232.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00