விமானப்படை தாக்‍குதலில் பல தீவிரவாத முகாம்கள் அழிக்‍கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே விளக்‍கம்

Feb 27 2019 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
புல்வாமா தாக்‍குதலைத் தொடர்ந்து, மற்றும் ஒரு பயங்கரவாத தாக்‍குதலுக்‍கு பாகிஸ்தானை அடிப்படையாகக்‍ கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி அமைப்பு திட்டமிட்டிருந்ததாக இந்திய வெளியுறவு செயலாளர் திரு. விஜய் கோகலே தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஆக்‍கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படை இன்று அதிகாலை நடத்திய தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவு செயலாளர் திரு. விஜய் கோகலே செய்தியாளர்களை சந்தித்து விளக்‍கமளித்தார்.

அப்போது, பாகிஸ்தான் பின்னணியிலேயே புல்வாமா தாக்‍குதல் நடத்தப்பட்டதாகவும், தீவிரவாதத்துக்‍கு எதிராக நடவடிக்‍கை எடுக்‍கும்படி பாகிஸ்தானுக்‍கு பலமுறை தெரிவிக்‍கப்பட்டதாகவும் அவர் கூறினார்.மற்றுமொரு அதிபயங்கர தாக்‍குதலுக்‍கு ஜெய்ஷ்-இ-முகமது திட்டமிட்டிருந்ததாகவும் திரு. கோகலே தெரிவித்தார்.

இன்று அதிகாலை தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து விமானப்படை தாக்‍குதல் நடத்தப்பட்டதாகவும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமான பாலக்‍கோட்டில் முதல் தாக்‍குதல் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பொதுமக்‍களுக்‍கு பாதிப்பு ஏற்படாத வகையில் தாக்‍குதல் நடத்துமாறு இந்திய வீரர்களுக்‍கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3019.00 Rs. 3229.00
மும்பை Rs. 3042.00 Rs. 3221.00
டெல்லி Rs. 3054.00 Rs. 3235.00
கொல்கத்தா Rs. 3055.00 Rs. 3232.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00