புல்வாமா தாக்‍குதல் சம்பவம் - உயிரிழந்த 40 துணை ராணுவப்படை வீரர்களின் குடும்பங்களுக்‍கும் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி

Mar 8 2019 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

புல்வாமா தாக்‍குதலில் உயிரிழந்த 40 துணை ராணுவப் படையினரின் குடும்பங்களுக்‍கும் தலா ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், கடந்த 14-ம் தேதியன்று நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தீவிரவாத தாக்குதலில், 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக கடந்த 26-ம் தேதி, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை தாக்‍குதல் நடத்தியது.

இந்நிலையில், புல்வாமா தாக்‍குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் குடும்பங்களுக்‍கும் தலா ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ராணுவ வீரர்கள் உயிரிழந்ததால், அவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசு வழங்கும் 36 லட்சம் ரூபாயுடன், ஆபத்து பணிக்கான தொகை, காப்பீடு, வீரதீர செயல்களுக்கான நிதி ஆகியவற்றுடன் சேர்த்து சுமார் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.

இதனிடையே, பாகிஸ்தானில் சிறைபிடிக்‍கப்பட்டு பின்னர் விடுவிக்‍கப்பட்ட விமானப்படை விங் கமேண்டர் அபிநந்தனுக்‍கு பரம்வீர் சக்‍ரா விருது வழங்க, தமிழக அரசு சார்பாக பிரதமர் திரு. மோடிக்‍கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00