நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Mar 12 2019 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லியில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா இந்த அறிவிப்பை வெளியிட்டார். சிக்கிம் மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதம் 27-ம் தேதியும், அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் ஜுன் 1-ம் தேதியும் முடிவடைகிறது. ஒடிஸா மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் ஜுன் 11-ம் தேதியும், ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் ஜுன் 18-ம் தேதியும் முடிவடைவதால், இந்த நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா அறிவித்தார்.

அதன்படி, சிக்கிம் மாநிலத்தில் 32 சட்டப்பேரவை தொகுதிகள், ஆந்திர பிரதேசத்தில், 176 சட்டப்பேரவை தொகுதிகள், அருணாச்சல பிரதேசத்தில் 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 11ம் தேதியும், ஒடிசா மாநிலத்தில், 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 4 கட்டமாக ஏப்ரல் 11, 18, 23 மற்றும் 29ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை, மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00