தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது - இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு

Mar 12 2019 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு.சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

டெல்லியில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் திரு.சுனில் அரோரா, ஒட்டுமொத்த தேர்தலையும் தலைமையிடத்தில் இருந்து கண்காணிக்‍க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், 99 சதவீத வாக்‍காளர்கள் அடையாள அட்டை பெற்றுள்ளனர் என்றும் கூறினார்.

நாடுமுழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்‍கு வந்ததாக தெரிவித்தார். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அரசியல் கட்சிகள் ஒலிப்பெருக்‍கியை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளாதகவும், தேர்தல் விதிமீறல்களை பொதுமக்‍கள் மொபைல்களில் படம்பிடித்து அனுப்பலாம் என்றும், புகார் வந்த 100 நிமிடங்களில் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் விளம்பரங்களை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் சா‌லைகள் மற்றும் தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் பேனர்கள், சுவரொட்டிள், பதாகைகளை தேர்தல் அதிகாரிகள் பணியாளர்களை கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00